கடற்கரையில்
மேடுகளாய் மணற்வீடுகள் ;
குழிகளாய் பல்லாயிரம்
மனிதகுலப் பாதச்சுவடுகள்;
மேடுகளாய் மணற்வீடுகள் ;
குழிகளாய் பல்லாயிரம்
மனிதகுலப் பாதச்சுவடுகள்;
சுழன்றடிக்கும் காற்றதனால்
படிந்திருக்கும் மணற்பரப்புகள் -
நிலைத்திருக்கும் நேரமதோ
ஓர் இரவுதான்!!
அப்படியிருக்க நம்
மனக்கரையில் (மட்டும்)
தோரணங்களாய் புகழ்ச்சிகள்;
கரைச்சுவடுகளாய்
அன்றாட நிகழ்வுகள்;
உறவுகள் தரும்
துன்பமதையும் நீக்கமற
நிலைபெறச் செய்து
வாழ்வியலை மாற்றிக்
கொள்வதேனோ???
தினம் தினம் நிகழும்
ஆனந்தத் தருணங்களால்
நம் மனக்கரைகளை
துடைத்தெறிவோமே!!
- ஜே கே
அவசியமான கருத்து, அழகான கவிதையில்!! ரசித்தேன்! சிந்தனைக்கு வாழ்த்துக்கள் JK :)
ReplyDelete